தலைமுறை தலைமுறையாக பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து வழிபாடும் செய்யும் சந்ததியினராகவே நாம் உருவாகிக் கொண்டிருக்கிறோம், இப்படி இருக்கும் பட்சத்தில் பிரதோஷ பலன்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள தான் வேண்டும்..
மூணு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா விஷ்ணு சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் பார்ப்பதற்கு சமம், ஐந்து பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும், ஏழு பிரதோஷங்கள் திறந்து பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், 13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும் 21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் 33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும், 77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு யுத்திரையாகம் செய்த வரம் கிடைக்கும், 108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம் 121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது, 1008 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அஷ்வமேதயாகும் நடத்தியதற்கு சமம்..!!




