நாம் முன்பதிவு செய்து ரயில் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது நமது சீட்டில் வேறு யாராவது உட்கார்ந்து இருந்தால் எரிச்சலும் கோபமும் நம்மை அறியாமல் தூண்டும் அவர்களிடம் சண்டை போடுவோம் அல்லது சண்டை போடாமல் நாமே நம்மை வெறுப்பேத்திக் கொள்வோம் அவற்றையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு இனி அந்த பயத்திலும் பதட்டத்தில் இருந்து வெளிவர இந்த எளிய முறையை பயன்படுத்துங்கள், உங்கள் சீட்டில் நீங்களே அமர முடியும்..
ரயிலில் நாம் முன்பதிவு செய்த சீட்டில் வேறு நபர் அமர்ந்து கொண்டு நகர மறுத்தால் டென்ஷனாக தேவையில்லை ரயில்வே ஹெல்ப்லைன் என்னான 139க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும், இருக்கையன்,PNR நம்பர், seat accupeid by another என டைப் செய்து அனுப்பினால் போதுமானது, மேலும் 10 நிமிடத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து சம்பந்தப்பட்ட நபரை அனுப்பி வைப்பார் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும் இதனால் பயணிகள் எரிச்சல் அடையாமலும் மன நிம்மதியோடு ரயில் பயணத்தை மேற்கொள்ளவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..!!




