பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான வெளியான ‘தி ராஜாசாப்’ திரைப்படம் ஒடிசாவில் ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தின் முதல் காட்சியை காண திரண்ட ரசிகர்கள், பிரபாஸ் திரையில் தோன்றியதும் விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும் ஆரத்தி எடுத்தனர். அப்போது திடீரென தியேட்டருக்குள் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த ரசிகர்கள் தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரசிகர்கள் ஆரத்தி எடுத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.




