பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள் கண்டிப்பாக இந்த பதிவை கட்டாயமாக படிக்க வேண்டும். ஏனெனில், தங்கள் வீட்டில் உள்ள அம்மா, மனைவி, மகள் என அனைத்து பெண்களும் ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க பெண்கள் கண்டிப்பாக வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக்கீரை சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது முருங்கைக்கீரை பொரியல் முருங்கைக்கீரை சூப் போன்ற ஏதாவது ஒரு முருங்கைக்கீரை சம்பந்தப்பட்ட உணவை எடுத்துக் கொள்வது ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு மிகவும் உதவுகிறது. சிவப்பு கொண்ட கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சுண்டைக்காய் சம்பந்தமான உணவுகளை வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக பழங்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திராட்சை மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு உதவுகிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். பீர்க்கங்காய் மற்றும் உளுந்து களி சாப்பிடுவதன் மூலமும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். உணவில் உளுந்தை சேர்த்துக் கொள்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. கீரை வகைகள் ஆன பொன்னாங்கண்ணி கீரை முருங்கைக்கீரை ஆகியவற்றை கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். மட்டன் மற்றும் சுவரொட்டி சாப்பிடுவதன் மூலமும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க கண்டிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட வேண்டும்.




