Oplus_131072
பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன்
அதிகம் பிடிக்கிறது தெரியுமா?
பொதுவாக ஆண்கள் மனைவி மீதான அன்பை விட., பலமடங்கு அன்பை தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள்.
ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் நான்கு தாய்களை சந்திக்கிறான்.
முதலில் பெற்றெடுத்த தாய்,
இரண்டாவதாக சகோதரி உருவிலான தாய்.
மூன்றாவதாக தனது மனைவி உருவிலான தாய்.,
நான்காவதாக மகள் உருவிலான
தாய். இது ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.
மகள்கள் தங்களது அம்மாவை விட., அப்பாவை அதிகம் விரும்ப என்ன காரணம் என்பது பற்றி இதில் பார்ப்போம்..
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தைதான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.
பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான்.
தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான்.
இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.
மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.
வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை.
தன்னால் முடிந்த வரை மகள்களை
மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.
தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.
அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை.
ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.
மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர்.
அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.
கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும்
உறவு அப்பா.
அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீருக்கு காரணமாகிறது.
ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா.
அதனால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.
படித்ததில் பகிர்வது.




