வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து டாக்கா பல்கலை., மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். மேலும், வங்கதேச தேசியவாத கட்சி பிரமுகர் ஃபஜ்ர் அலி என்பவர், பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




