தெலங்கானா மாநிலத்தில், ஜனவரி 6 முதல் மூன்று நாட்களுக்குள் ஷியாம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் 300 தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஜனவரி 9 அன்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




