மாலை நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

மாலை நேரங்களில் பஜ்ஜி, சமோசா, போண்டா, சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இவற்றில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு, உடலில் கெட்ட கொழுப்பான LDL அளவை அதிகரித்து, இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

அதேபோல், மைதாவால் தயாரிக்கப்படும் உணவுகளை மாலை நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தக்கூடும். மாலை 6 மணிக்குப் பிறகு அதிகமாக டீ, காபி போன்ற கஃபைன் பானங்களை குடிப்பது இரவு தூக்கத்தை பாதிக்கலாம்.

மேலும், இரவில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற கனமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். பதப்படுத்தப்பட்ட அல்லது அதிகமாக சமைக்கப்பட்ட சிவப்பு இறைச்சியை அடிக்கடி சாப்பிடுவதால் சில வகை புற்றுநோய்களின் அபாயமும் அதிகரிக்கலாம்.

எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் இத்தகைய உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read Previous

அல்சர் பிரச்சனைக்கு இளநீர் உதவுமா?.. தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!!

Read Next

வீட்டிலேயே செய்யக்கூடிய வித்தியாசமான ஹாட் பெப்பர் சிக்கன் செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular