பேச்சின் சிறப்பை பற்றி அறிந்து கொள்ள.. இந்த பதிவை கட்டாயமாக படிங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் பேச்சுத் திறமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தற்போதுள்ள காலம் கட்டும் வரை அனைவரும் ஒரு வரியை கண்டிப்பாக யாரிடமாவது கூறியிருப்போம். அவனுக்கு என்னப்பா வாய் பேசியே பொழச்சுப்பான். இந்த வரி தான் அது. ஏனென்றால் பேசுவது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சரியாக பேசுவது என்பதுதான் மிக மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் எப்படி நாம் பேச வேண்டும் பேச்சின் சிறப்பு என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பேச்சின் சிறப்பு:
கோபமாய் பேசினால் நம்முடைய குணத்தை இழப்போம். அதிகமாய் பேசினால் அமைதியை இழப்போம். வெட்டியாய் பேசினால் வேலையை இழப்போம். வேகமாக பேசினால் அதற்குரிய அர்த்தத்தை இழப்போம். ஆணவமாக பேசினால் ஒருவருடைய அன்பை இழப்போம். பொய்யாய் பேசினால் நம்முடைய பெயரையே இழப்போம். சிந்தித்துப் பேசினால் நாம் சிறப்பாய் இருப்போம். சிரித்து பேசினால் அன்போடு இருப்போம். என்ற வரிகள் கூட உணர்த்துகிறது நாம் எப்படி பேசினால் எப்படி இருப்போம் என்று. அனைவரும் இதை கடைப்பிடித்து வாழ்க்கையில் அனைவரிடமும் உண்மையாகவும், அன்பாகவும், நேர்மையாகவும் இருப்போம்.




