போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 

 

தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின் போது, தன்னை அறைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்ததாக கூறப்படும் ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

போராட்டத்தின் போது அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தஞ்சை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

Read Next

மீனவர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – அமைச்சர் ராஜீவ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular