“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

 

 

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும்போது பல பேர் இந்த அவையில் இருக்க மாட்டீர்கள்” என ஆளும் தரப்பை விமர்சித்து சவால் விடுத்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், இந்த சட்டப்பேரவையில் ஒரு காலத்தில் திமுகவுக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இருந்த வரலாறு உள்ளது என்றும், திமுக எத்தனை முறை பின்னடைவை சந்தித்தாலும், விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழும் என்றும் தெரிவித்தார்.

 

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 5 முறை பேரிடர் ஏற்பட்டதாகவும், அந்தச் சூழ்நிலைகளில் எந்தவித பெரிய சேதமும் ஏற்படாமல் தமிழகத்தை பாதுகாத்தவர் மு.க.ஸ்டாலின் என்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

 

அவரது இந்தப் பேச்சு சட்டப்பேரவையில் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Previous

11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

Read Next

போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular