நாவூறும் சுவையில் அருமையான மட்டன் கிரேவி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

மட்டன் கிரேவி….

 

தேவையான பொருட்கள்

1/2 கிலோ மட்டன்

1/4 கப் ஆயில்

1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1டீ ஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் கர மசாலா தூள்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டேபிள்ஸ்பூன் மிளகு சீரகத்தூள்

1 தக்காளி

தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

 

ஸ்டவ் வில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் கறியுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதோடு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் அப்பொழுதுதான் மட்டனில் ருசி இருக்கும்.

 

வதங்கி சுருங்கிய பின் தக்காளியை விழுதை சேர்த்து என்னை பிரிந்து வர வதக்க வேண்டும் அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி கறியை வேக விட்டு எடுக்கவும்.

 

கறி வெந்து குக்கர் ஆரியபின் மீண்டும் அதனைத் திறந்து வெந்த கறியை அடுப்பில் வைத்து கடைசியில் மிளகு சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு கொதி வந்தபின் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம். விரும்பினால் கொத்தமல்லி இலைகள் நறுக்கி சேர்த்து பரிமாறலாம்..

Read Previous

கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

Read Next

கற்றாழை வைத்து தித்திப்பான வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular