திருநெல்வேலியில் மது அருந்த பணம் தர மறுத்தத கடைக்காரர்களை அவதூறாக பேசி, தாக்கி, காய்கறிகளை வெளியே வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். சி.என்.கிராமத்தில் சுப்புலட்சுமி என்பவரிடம் இசக்கி ராஜா என்பவரும், பேட்டை பகுதியில் இஸ்மாயில் என்பவரிடம் சரித்திர பதிவேடு குற்றவாளியான முருகன் என்பவரும் பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் இருவரும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.




