மது பழக்கத்தால் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்து இறப்பதற்கு முன் அவருடைய எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்..??

Oplus_131072

 

 

அமெரிக்காவை சேர்ந்த உளவியல் மருத்துவரான சாம் பீட்டர்சன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில்…

‘மது பழக்கத்தால் உள்ளுறுப்புகள் செயலிழந்து இறப்பதற்கு சில நேரங்களுக்கு முன் பெரும்பாலானவர்கள் கூறும் முதல் வார்த்தைகள்…

“Doctor, I beg you. Please save me. Give me one last chance and I will surely quit..”

இதை தான் பெரும்பாலானவர்கள் அச்சத்துடன் கூறுவார்கள்.

இதே நபர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பிரச்சனை ஏற்படும்போது மருத்துவர்கள் இவர்களுக்கு பல வாய்ப்புகள் கொடுப்பார்கள். ஆனால், அவற்றை அவர்கள் மிக சாதாரணமாக உதாசீனப்படுத்தி விடுவார்கள்.

ஏனெனில், அப்போது அவர்களுக்கு உயிரின் மதிப்பும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மீதுள்ள பாசம் என எதுவும் மூளைக்கு எட்டாது. மது பழக்கத்தை உற்சாகமாக மீண்டும் தொடர்வார்கள்.

ஆனால், எல்லாம் காலம் கடந்த பின்னர், மரண படுக்கையில் அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவும், செய்த தவறை நன்றாக உணர்ந்தவர்களாகவும் கூறுவார்கள்.

சில நபர்கள் ‘ஒருவேளை, இந்த முறை மட்டும் நான் பிழைத்துக்கொண்டால், நான் இதுவரை செய்ய முடியாது என நினைத்து தள்ளி போட்ட அத்தனை விஷயங்களையும் நான் செய்து முடிப்பேன். இந்த சாவை விட அந்த செயல்கள் கடினமான விஷயங்கள் இல்லை’ என பிராக்ட்டிக்கலாக பேசுவார்கள்.

சில நபர்கள், ‘அய்யோ…என் மகள், என் மகன், என் மனைவி…இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்..? இவர்களை விட இந்த மது பழக்கம் எப்படி முக்கியமானதாக மாறியது…? நான் என் குடும்பத்திற்கு எவ்வளவு வலியையும், சுமையையும் ஏற்றி வைத்துள்ளேன்…இவ்வளவு கொடுமைகளை செய்த எனக்கு இந்த மரணம் சரியான தண்டனை தானா..? எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், என் பிள்ளைகளையும், மனைவியையும் நன்றாக பார்த்துக் கொள்வேனே… கடவுளே…அந்த வாய்ப்பை நீயாவது எனக்கு ஏற்படுத்திக் கொடு’ என கண்ணீருடன் வேண்டிக் கொள்வார்கள்.

சிலர் ‘எனக்கு சந்தோஷம் கொடுத்த இந்த பழக்கம் இப்போது என் உயிரையே பறிக்க போகிறது. மது கொடுத்த சந்தோஷம் இப்போது என்னிடம் இல்லை. ஒரு தற்காலிக சந்தோஷத்திற்காக என் உயிரையே நான் விடப் போகிறேனே…அய்யோ…எனக்கு தெரிந்த என் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா…? அவர்களிடம் ‘உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து குடிப்பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்’ என கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன்” என்பார்கள்.

சிலர் ‘குடியாலே இவன் வாழ்க்கை முடிந்தது என எல்லாருக்கும் உரக்க சொல்லி விடுங்கள்’ எனக் கூறி விரக்தியில் சிரிப்பார்கள்.

இதே நபர்களுக்கு சில ஆண்டுகள், மாதங்களுக்கு முன் இந்த உணர்வுப்பூர்வமான எண்ணங்கள் தோன்றாது. ஏனெனில், அப்போது அவர்களுக்கு மரணத்தின் வலியும், குடும்பத்தை நிரந்தரமாக பிரியும் வலியும் உண்மையாக புரியாது.

எல்லாம் காலம் கடந்து, உடல்நிலை மோசமடைந்து, அதனால் உடல் ரீதியாக சித்ரவதை அனுபவித்து ‘சாக போகிறோம்’ என உறுதியாக தெரியும்போது தான் பலருக்கும் தன் உடல்நிலை பற்றியும், தன் பொறுப்புகள் பற்றியும், தன்னுடைய குடும்பத்தை பற்றியும் உண்மையான அக்கறை ஏற்படும்.

அப்போது அவர்களின் மனநிலை படும்பாடு, தவிப்பு, எப்படியாவது நமக்கு ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்காதா? என்கிற அந்த எண்ணங்கள் எல்லாம் பல மரணங்களுக்கு ஈடானதாக இருக்கும்”.

ஆக, நாமும் அந்த கொடூரமான ‘கடைசி வாய்ப்புக்காக’ ஏங்க வேண்டுமா என்பது நம் கையில் தான் உள்ளது!!

Read Previous

எலி வீட்டில் இருந்து 5 நிமிடங்களில் வெளியேறவேண்டுமா..??

Read Next

ஒரு தாயின் நெகிழ்ச்சியான பதிவு..!! கண்டிப்பா படிங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular