மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?.. படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்.

மரணம் உன்னதமானது.

அதை உணரும் போது

உயிர் உடலில் இருக்காது. உணர்வை சொன்னவரும் இல்லை.

 

ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்.

 

*இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்.*

 

உலகின் வேறு எதுவும் மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.

 

நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை,

நாம் தூக்கி வளர்த்த பிள்ளை, நாம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை, நம்முடன் சுற்றித்திரிந்த நண்பன்,

இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்.

 

ஒருநாள் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை ஆட்டிப்பார்க்கிறது.

 

மனதுக்கு நெருங்கியவரை

குழிக்குள் இறக்கி

மண்ணிட்டு மூடும் போது

வரும் வெறுமை.

 

நாம் தலையில் சேர்த்து வைத்திருக்கும் புகழ்,

ஈகோ, அகந்தை, கர்வத்தையும்

சேர்த்து மண்ணோடு மூடிவிடும்.

 

ஒரு மரணத்தை காணும் போது மனம் இறங்க வேண்டும்.

 

“மரணம் எனக்கும் வரும்” என்ற எண்ணம் தான் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

 

பணம் மீது தீராத வெறி,

பதவி மீது தீராத வேட்கை,

இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.

 

ஒவ்வொரு மரணத்தை காணும் போதும்

நம் மனதில் இருக்கும்

வஞ்சம், பகை, ஈகோ, போன்றவற்றை மறக்க வேண்டும்.

 

ஒவ்வொரு மனிதனும் மரண வீட்டுக்கு செல்லும்போது தன் பிரேதம் இருந்தால் சுற்றி உள்ளவர்கள் என்ன பேசுவார்கள்

நம் உறவுகள் நட்புகள் சமூகம் என்ன பேசும் என்ன நினைக்கும்

அவர்களுக்கும் நமக்கும்மான தீர்க்கப்படாத கணக்குகள் கேட்கப்படாத மன்னிப்புகள் ,

நாம் செய்த பாவங்கள்

எல்லாம் உணர்ந்து விட்டால் அந்த இடத்தில் அவன் மனிதனாக மீண்டும் பிறக்கிறான்….

 

மரணத்தின் எண்ணம் நம் இறையச்சத்தை அதிகரிக்கும்.

 

மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம் மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது, நம் மனமும் ஒரு முறை அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.

 

மண்ணின் இயற்கை சுழற்சியை ஒழுங்கு செய்யும் ஒரே விசயம்

மரணம் மட்டுமே.

 

நாம் பிறக்கும் போது சுற்றி நின்று சிரித்த சமூகம்…

நாம் இறக்கும் போது சுற்றி நின்று அழுதால் அதுவே நமக்கான ஈடேற்றம்.

Read Previous

திருப்பூர்: சாலையோரம் தூங்கிய குடும்பம்.. குழந்தை கடத்தல்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

தயவு செய்து அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய உண்மை பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular