மனித வாழ்க்கையைப் பற்றிய மிகக் கசப்பான உண்மை எது..??

Oplus_131072

மனித வாழ்க்கையைப் பற்றிய மிகக் கசப்பான உண்மை எது?

உங்களுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும்…சாகசம் செய்ய வேண்டும்…சுற்றிப்பார்க்க வேண்டும்… என எந்த ஆசை இருந்தாலும் அதை முடிந்தவரை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற பாருங்கள்‌..

ஏனென்றால்…

நாம் எல்லோரும் விரைவில்…சில வருடங்களில் இறந்து விடுவோம்…

இதை அறிந்தும், ஏற்றுக்கொள்ள மனித மனம் மறுக்கிறது.

எனக்கும் சில நேரம் ரொம்ப மிதப்பு தான்…என்னமோ 100 வருசம் வாழப்போரவன் மாறி…😂

அது முடியாதுனு, எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்…

மறதியினால அறியாமையும் உணராமயே போச்சு..!

அதனால், ஓடுங்க..ஆடுங்க…தேடுங்க…

கல்யாணம் செய்ய நிச்சயம் பலரும் பெண் தேடி இருப்பீர்கள்.

முடிவில் என்ன ஆயிற்று…பெண் நிச்சயம் கிடைத்தது அல்லவா…?

” எங்கங்க பெண் கிடைத்தது, பிசாசு தான் கிடைத்தது” 😅என சிலரின் மன குமுறல் எனக்கு கேட்டாலும்…

நீங்கள் தேடியது கிடைத்தது அல்லவா! அது தான் முக்கியம்.

விளையாட்டாக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்..

பெண்ணை தேடினால் பெண்ணை அடைவீர்கள் என்றால்…

செல்வத்தை தேடினால், செல்வத்தை அடைவீர்கள்.

உங்களுக்கு ஒரு சத்தியத்தை சொல்கிறேன்.

நீங்க எதை தேடுகிறீர்களோ அதை அடைவீர்கள்..!

பணத்தை தேடினால் நிச்சயம் பணத்தை அடைவீர்கள்.

பதவியை தேடினால் நிச்சயம் பதவியை அடைவீர்கள்.

இந்த சூத்திரம் அனைத்திற்கும் பொருந்தும்…ஒரே ஒரு இலக்கின் மீது முழு கவனத்தை செலுத்தினால், இந்த பிரபஞ்சம் அந்த இலக்கை நீங்கள் அடைவதற்கு உண்டான அனைத்து உதவியையும் செய்யுமாம்.

உலகத்தில் எது உங்களுக்கு வேண்டுமென்று தேடினாலும் அதை அடைவீர்கள்.

ஆக,

வாழும் போதே தேடலை தொடங்குங்கள்…! தேடி தேடி வாழ்க்கையை அனுபவியுங்கள்.!

Read Previous

முதியோர் இல்லம்..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

Read Next

வாரம் 3 முறை தேங்காய் பால்..!! உடலில் நடக்கும் அதிசயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular