கணவன் மனைவி உறவு..!!கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் விஷயங்கள்..!!

Oplus_131072

#கணவன்_மனைவி_உறவு

கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் விஷயங்கள்….

சாப்பாடு பரிமாறும் போது”நீ சாப்டியா செல்லம்.வா இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் இல்லனா “ஆ” காட்டு நான் உனக்கு ஊட்டிவிடுறேன் ” என்று சின்ன சின்ன விஷயங்களில் கூட அவர் மீது அக்கறை எடுத்து கொண்டால் மனைவிக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.

மற்றவர்களுடன் சண்டையோ மனஸ்தாபமோ ஏற்படும் போது அது யாராக இருந்தாலும் அவர்களிடம் தன் மனைவியை விட்டு கொடுத்து பேசாமல் இருக்கும் கணவனை கண்டிப்பாக மனைவிக்கு பிடிக்கும்.🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑

மனைவிக்கு காய்ச்சல் அல்லது உடம்பு சரியில்லாத சமயங்களில் “பசுவின் பக்கத்திலேயே நிற்கும் கன்று” போல அவரை விட்டு வேறு எங்கும் செல்லாமல் மற்ற வேலைகளையெல்லாம் தள்ளி வைத்து விட்டு கூடவே இருந்து கவனிக்கும் கணவனை மனைவிக்கு அதிகமாக பிடிக்கும்.

ஒருவேளை கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கோவமாக மனைவி பேசாமல் இருந்தால் இரவு பத்து மணிக்கு மேல் சமாதானத்தை நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள்..

மனைவியை பார்த்து “நீ எவ்வளோ வேணும்னாலும் சண்டை போடு ஆனா என் கூட பேசாம மட்டும் இருக்காதபா” என்று சொல்லி (முத்தம்) கொடுத்து விடுங்கள்.

தானே முன் வந்து சண்டைக்கு பிறகு சமாதானத்துடன் கூடிய ரொமான்ஸ்(காதல்) செய்யும் கணவனை விரும்பாத மனைவி இவ்வுலகில் இல்லை…..

கணவன் மனைவி உறவில் எத்தனை சண்டை வந்தாலும் இரவுக்குள் சமாதானம் ஆக வேண்டும்…. அப்படி ஆகவில்லை என்றால் அந்த உறவில் விரிசல் அதிகமாக தான் இருக்கும் தவிர குறையாது…..

மனைவி என்பவள் நம்மில் பாதி….

Read Previous

அனுபவம் பலவிதம்..!! அருமையான சிறுகதை கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Read Next

பூட்டிய கிரில்லுக்கு அப்பால்..!! எத்தனை முறை படித்தாலும் மனதை கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular