அனுபவம் பலவிதம்..!! அருமையான சிறுகதை கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

அனுபவம் பலவிதம்..

ஒருவர் தனது விலை உயர்ந்தக் காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்…

அந்த வழியாக ஓடிச் சென்ற தெருநாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது…

இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார்…

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு…

அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக, நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது.

அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது.

சொன்னாலும் அதற்குப் புரியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்…

கேள்வி கேட்டவர் , இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை…

இது போலத் தான் நம் வாழ்விலும், நம் மதிப்பை அறியாதவர்கள் சொந்த புத்தியும் இல்லாம சொல் புத்தியும் இல்லாம நம்மை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்வோம்.

*நம் கடமை எதுவோ அதைச் செய்வோம்.. நாம் சொல் செயல் வீரராக இருந்தாலும் அவர்களைக் கண்டு கொள்ள வேண்டாம்.

Read Previous

ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்வது எப்படி..!!

Read Next

கணவன் மனைவி உறவு..!!கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular