19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்ற திரிபுரா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராஜேஷ் பானிக், மேற்கு திரிபுராவில் உள்ள ஆனந்தநகரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 40. பானிக் 2002-03 சீசனில் திரிபுராவுக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். பின்னர், அவர் 16 வயதுக்குட்பட்ட மாநில அணிக்கான தேர்வாளராக பணியாற்றினார். வெள்ளிக்கிழமை அவரது அகால மரணம் மாநில கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.




