Oplus_131072
கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி …..
தேவையான பொருட்கள்
2 கப் வடித்த சாதம்
1/2 கட்டு கொத்தமல்லி தலை
2 பல் பூண்டு
1 பச்சை மிளகாய்
தாளிக்க
கடுகு
கருவேப்பிலை
நிலக்கடலை
நெய்
செய்முறை …..
கொத்தமல்லி இலையை நன்றாக கழுவி இதோடு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
கடாயில் நெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை நிலக்கடலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
நன்றாக வதங்கிய பின் சாதம் மற்றும் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான மல்லி சாதம் ரெடி…




