மொறுமொறு பூரி செய்ய ஆசையா..?? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

Oplus_131072

மொறுமொறு பூரி செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்…

பூரி செய்யும்போது மாவுடன் ரவையை வறுத்து சேர்த்து பிசைந்தால் பூரி சுவையுடனும், மொறுமொறுப்புடனும் இருக்கும்.

வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் கண்ணாடிகளைத் துடைத்தால் பளிச்சென்றிருக்கும்.

முட்டை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் முன் முட்டைக் கூட்டில் சமையல் எண்ணெய்யைத் தடவி அதில்முட்டைகளை வைத்தால் கெடாது.
சீனி வைத்துள்ள பாட்டில் அல்லது ஜாரில் சிறிது கிராம்புத் துண்டுகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

மீன், இறைச்சி ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது கையில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.வாடை அடிக்காது. கையில் பாதிப்பு ஏற்படாது.

வீட்டில் எறும்புகள் தொல்லை இருந்தால் அதற்கு பெருங்காயத் தூளைத் தூவிவிடவும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

பூண்டு, வெங்காயம்,மாமிசம் இவற்றை கத்தியால் வெட்டும்போது துர்நாற்றம் வீசும். இதற்கு சிறிதளவு கல் உப்பை பொடித்து கத்தியில் தடவி நீரில் கழுவினால் போதும்.

பழங்களை கடைகளில் இருந்து வாங்கி வரும்போது வீட்டில் அவற்றை சிறிதளவு வினிகர் கலந்த நீரில் போட்டு கழுவி சாப்பிடலாம். கிருமிகள் இருக்காது.
அரிசி, கோதுமை போன்ற தானியங்களை போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சிறிது வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் தொல்லை இருக்காது.

வாழைத் தண்டை பொடிப் பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டுப் பிசைந்து பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டு கலந்து வடை செய்தால் மொறு மொறுவென சுவை ஆக இருக்கும்.

கத்தரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்க வேண்டும், கத்தரிக்காய் நன்றாக குழையும், ருசியும் கூடும்…

 

Read Previous

தினமும் காலை மற்றும் மாலை 20 நிமிடங்கள் கூழாங்கல் மீது வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

காசி அல்வா இனி வீட்டிலேயே செய்யலாம்..!! முழுமையான விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular