தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், ரூ.25 லட்சம் வரை குழுக்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் கடன் வழங்கப்படும். ஆண்டு வட்டி 7% என்ற அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். டாப்செட்கோவின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சாதி, வருமானம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் அவசியம்.




