பீலேவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜெர்சி ரூ.47 கோடிக்கு ஏலம்!
1958-ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெர்சி, சுமார் ரூ.47 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு அர்ஜென்டினா ஜாம்பவான் டியாகோ மரடோனா 1986 உலகக் கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்சி ரூ.70 கோடிக்கு ஏலமாகி உலக சாதனை படைத்திருந்தது.
இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது ஜெர்சி என்ற பெருமையை பீலேவின் இந்த ஜெர்சி பெற்றுள்ளது. கால்பந்து ரசிகர்களிடையே இந்த ஏலம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.




