திமுக நிர்வாகி மீது தாக்குதல்? – தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு..!!

 

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது, தவெக நிர்வாகிகள் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தவெக அல்லது காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!

Read Next

ரூ.47 கோடிக்கு ஏலம் போன பிரேசில் ஜாம்பவான் பீலேவின் ஜெர்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular