வடிச்ச கஞ்சி தண்ணியை குடிப்பதினால் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Oplus_131072

இளைஞர்களே! வடிச்ச கஞ்சியை குடிங்கள்.

வடிச்ச கஞ்சி என்றால், இக்கால தலைமுறையினருக்கு தெரியுமா?

வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் வடிச்ச கஞ்சியை சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர்.

ஆனால் அரிசியை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சோறு சாப்பிடுவது தான் நல்லது.

அதுமட்டுமின்றி அப்படி வடித்த சோற்றின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சோற்றை விட, அந்த நீரில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.

அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சோற்றை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சோறு வடித்த கஞ்சி கஞ்சியை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.

வடிச்ச கஞ்சியை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எனர்ஜி :-
வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது.

இரைப்பைக் குடல் அழற்சி :-
வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

உடல் வெப்பத்தைத் தணிக்கும் :-
வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் :-
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல் :-
வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட் :-
வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-
வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.

Read Previous

வங்கி எழுத்தர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Read Next

மனித உடல் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular