Oplus_131072
வாழைப்பழங்களின் பயன்கள்,
பூவன் பழம் – அளவில் சிறியவை. ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது. ரஸ்தாளி – மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும். மலை வாழைப்பழம் (பச்சைப் பழம்) – குழந்தைகளுக்கு மிகப்படித்தமான பழம். இரத்த விருத்தி செய்யும். நேந்திரம்பழம் – பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு. கற்பூரவள்ளி பழம் – வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும். செவ்வாழை – நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும். கதளி மற்றும் எலச்சி கதளி ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது. எலைச்சி – சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது. பேயன் பழம் – வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.




