எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ
நினைக்காதீர்கள்!
உங்கள் பேரக்குழந்தைகளின் மேல்
உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. என்பதை மறக்க வேண்டாம். குழந்தை
வளர்ப்பில் மகனுக்கோ, மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.
விலகியே இருங்கள்..உறவுகள்
இனிமையாக இருக்கும். என்பிள்ளை..
என் பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை
உயிருடன் இருக்கும்வரை யாருக்கும் பகிர வேண்டாம்!
காலம் முழுவதும் அவர்களுக்காக பாடுபட்டு,பல இழப்புகளை சந்தித்து
இருப்பீர்கள்..அவற்றை சொல்லிக்
காட்டவேண்டாம்..உங்கள் கடமையை
செய்தீர்கள் அவ்வளவே..!
கூட்டுகுடும்ப வாழ்வு சிதைந்து போன
தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள்.. தேவைப்பட்டால் வருடம் ஒருமுறை சென்று,பேரன் பேத்திகளுடன் தங்கி வாருங்கள்.. அங்கு அதிகம் நாள் தங்க வேண்டாம்!
எந்த நேரத்திலும்,உங்கள் மனைவியை, கணவனை மருமகள் முன் விட்டுக் கொடுத்து பேசாதீர்கள்.!
அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம்.. சேமிப்பின்
அவசியம் பற்றி சொல்லி அவமானப்பட வேண்டாம்.
அவர்கள் வாழ்வது உங்கள் வாழ்வைப்போல போராட்ட வாழ்வு இல்லை.. நவீன கார்ப்பரேட் வாழ்க்கை.
நீங்கள் 1000ரூ பெரிதாய் நினைத்தவர்கள்.. அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள்.. எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்!
அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம்… அவர்கள் குழந்தையை
அவர்கள் கவனித்து கொள்வார்கள். உங்கள் அறிவுரையை தவிருங்கள்.!
உங்களைவிட அறிவிலும், திறமையிலும் அவர்கள்
சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்!!




