வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

Oplus_131072

வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டியவை.

சில காயங்கள்
மருந்தால் சரியாகும்.
சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

ஆடம்பரம் அழிவைத் தரும்.
ஆரோக்கியம் நல்வாழ்க்கை தரும்.

கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்.
.
மிதி வண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

வறுமை வந்தால் வாடக்கூடாது.
வசதி வந்தால் ஆடக்கூடாது.

வீரன் சாவதே இல்லை.
கோழை வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் வேகமாக செல்வதை
விட.

சரியான பாதையில் மெதுவாக செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD தெரியும்.
ஆனால் “Q”வரிசையில் போகத் “தெரியாது”.

எறும்புகளுக்கு ABCD
தெரியாது
ஆனால் “Q”வரிசையில் போகத் “தெரியும்”.

ஆயிரம் பேரைக்கூட ” எதிர்த்து” நில்.
ஒருவரையும் எதிர்பார்த்து நிற்காதே.

தேவைக்காக கடன் வாங்கு
கிடைக்கிறதே கடன் என்பதற்காக வாங்காதே.

உண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறது.

பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது.

கருப்பு மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

“சிவப்பு ” மனிதனின் நிழலும் கருப்புதான்.

வண்ணங்களில் ” இல்லை வாழ்க்கை.
மனித ” எண்ணங்களில்” உள்ளது வாழ்க்கை

” கடினமாய்” உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

” கவனமாய்” உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் ” உப்பாக ” இருக்கலாம்.

ஆனால்,
அவை வாழ்க்கையை ” இனிப்பாக ” மாற்றும்.

கடனாக இருந்தாலும்
சரி,
” அன்பாக ” இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

” செலவு” போக மீதியை சேமிக்காதே.
” சேமிப்பு ” போக மீதியை செலவு செய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு ” வெற்றி ” பெற்றால் சிலை,
” தோல்வி ” அடைந்தால் சிற்பி.

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை உயிரற்ற பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு ” முட்டாள்” என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
” புத்திசாலி” என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை ” போற்றும் “.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
” தூற்றும் “.

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் பொய்.

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே ” உண்மை”.

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் ” புத்திசாலி.

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் ” திறமைசாலி.

கவலைகள் கற்பனையானவை.
மீதி தற்காலிகமானவை.

குறைகளை “தன்னிடம்” தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை ” பிறரிடம்” தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் ” உண்டு”.
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் ” இல்லை”

விழுதல் என்பது ” வேதனை.
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை.

Read Previous

வீடுபுகுந்து போலீஸ் தாக்கியதில் தாய்-மகன் காயமடைந்ததாக புகார்..!!

Read Next

ஏன் வாழை இலையில் தண்ணீர் தெளிக்கிறோம் தெரியுமா..?? சாப்பிட்டு முடித்தவுடன் உள்பக்கமாக மடிக்கிறோம் ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular