ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்த குழம்பு செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு செய்வது எப்படி…..

தேவையான பொருட்கள்:

சுண்டக்காய் – 1 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
புளி – 75 கிராம் (நன்றாகச் சாறு எடுத்துக் கொள்ளவும்) சின்ன வெங்காயம் – 10
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, சிறிது உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
இப்படித்தான் செய்யணும்…
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில், அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து இறக்கிவைத்துக்கொள்ளுங்கள்.
அதைக் குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் பொன்னிறமாக வரும்வரை வதக்கி, பிறகு சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.
அதன் பிறகு, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்குங்கள்.
பிறகென்ன… மணக்க மணக்க, சுவைக்கச் சுவைக்க, ருசிக்க ருசிக்க, ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு தயார்.

Read Previous

எந்த நோய்க்கு எந்த பழத்தை சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப பரிகாரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular