அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
விடுதி ஊழியரை கொலை செய்த வழக்கில் அந்தோணி டேரல், காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கார்லோஸ் மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெரமி வில்லியம்ஸ் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மூவருக்கும் ஊசி மூலம் நச்சு செலுத்தி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு மீண்டும் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2010 ஜனவரி 7-ம் தேதி ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.




