3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “மனித உரிமை மீறல்!” – பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்!

 

 

கர்நாடகாவில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 

வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படும் 3 பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பேசிய திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், உயிரிழந்தவர்கள் அப்பாவி விவசாயிகள் என்றும், அவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் மனித உரிமை மீறல் மற்றும் போலி என்கவுண்டர் என்றும் குற்றம்சாட்டினார்.

 

மேலும், சம்பவத்தின் முழு பின்னணியையும் வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Read Previous

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – இபிஎஸ்!

Read Next

11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular