இந்த சட்னியை செய்தால் நொடிப்பொழுதில் சட்னி காணாமல் போய்விடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

தோசை மற்றும் இட்லிக்கு நாம் எப்போதும் ஒரு சில சட்னிகளை தான் சாப்பிட்டு வருகிறோம். இது நமக்கு நிச்சயமாக சலித்து போய் இருக்கும். இன்று வித்தியாசமான புதினா தக்காளி சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் : 

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

புதினா – 1/2 கைப்பிடி

வரமிளகாய் – 5

புளி – சிறுநெல்லிக்காய் அளவு

இஞ்சி – சிறு துண்டு

சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளவும். புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோலுரித்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் புள்ளி மற்றும் இஞ்சியை சேர்க்கவும்.

அதை நன்றாக வருத்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் சேர்க்கவும். அதன்பின் புதினா இலைகளை சேர்த்து வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஜாரில் இதனை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து தாலிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும். அவ்வளவுதான் சுவையான புதினா தக்காளி சட்னி தயார்.

Read Previous

சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

Read Next

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular