பூசணிக்காய் கூட்டு செய்வது எப்படி..??

Oplus_131072

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
அச்சு வெல்லம் – சிறிதலவு
உப்பு – தேவைoக்கேற்ப
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 5 (நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் – 1/4 பங்கு
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்

முதலில் பூசணிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.அரைக்க தேவையான பொருட்களை தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், அச்சு வெல்லம் மற்றும் 70 மில்லி தண்ணீரும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பூசணிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்க வேண்டும்.கூட்டு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான பூசணிக்காய் கூட்டு தயார்.

 

Read Previous

அரிசியுடன் இதை சேர்த்து வாரம் 2முறை யூஸ் பண்ணுங்க..!! உங்க தலை முடி அடர்த்தியாகும்..!!

Read Next

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தர்பூசணி குச்சி ஐஸ் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular