தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ.2,500 நிதியுதவித் திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறுவது அமைச்சர்களின் பேட்டிகள் மூலம் உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைகளில், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் தவிர்த்து மற்ற அனைத்து தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உதவித்தொகையை வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் செப்டம்பர் அல்லது நவம்பர் மாத உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.




