17 வயது சிறுமியை கடத்தி திருமணம்..!! போக்சோ சட்டத்தில் கைது..!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த 23 வயது பெயிண்டர் ரஞ்சித், 17 வயது சிறுமியை காதலித்து, ஜனவரி 11 அன்று ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை திருமணம் குறித்து அரசு மருத்துவர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

இரத்த மூலத்திற்கு தீர்வு தரும் பிரண்டை..!!

Read Next

சிறுநீரககல் (Kidney Stones) ஏன் உருவாகிறது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular