மாரடைப்பு வராமல் தடுக்கும் டாக்கடர் பிளான்..!! தினமும் இந்த நேரத்தில் சாப்பிட்டால் இதயம் தப்பிக்கும்..!!

Oplus_131072

 

காலை எழுந்ததும் 7 மணிக்குள் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, உடலின் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து 7:30 முதல் 8:30 மணிக்குள் தடிமனான ஓட்ஸ் கஞ்சி, ராகி அல்லது காய்கறி உப்புமாவுடன், ஆப்பிள், கொய்யா மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை காலை உணவாகச் சாப்பிடலாம்.

பின்னர் முற்பகல் 11 மணி அளவில் பப்பாளி மற்றும் தர்பூசணி பழங்களைச் சாலடாகச் சாப்பிட வேண்டும்.

மதிய உணவை 2 மணிக்குள் முடிப்பது அவசியமாகும்; கைக்குத்தல், சம்பா அல்லது கவுனி அரிசி சாதத்துடன், அதிக காய்கறி சேர்த்த குருமா, சாலட் மற்றும் தோல்கள் நீக்கப்பட்டு கிரில் செய்யப்பட்ட மீன் அல்லது சிக்கனை உணவாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மாலை 4:30 முதல் 5:30 மணிக்குள் சர்க்கரை இல்லாத லெமன் டீ, பிளாக் டீ அல்லது பிளாக் காபியுடன் கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, நட்ஸ் மற்றும் விதைகளைச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

இரவு உணவைச் சீக்கிரமாக 8 மணிக்குள், அதிகபட்சமாக 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இரண்டு சப்பாத்தி, காய்கறி குருமா, வெஜிடபிள் சூப் அல்லது கிரில் செய்த மீன் மற்றும் சிக்கன், மட்டன் சூப் போன்றவற்றை இரவில் எளிமையான உணவாகச் சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் என மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.

Read Previous

உடலை இரும்பாக்கும் எள்ளுப் பொடி சாதம்..!! – ஆரோக்கியமான எள்ளுப் பொடி சாதம் செய்யும் ரகசியம்..!!

Read Next

மல்லிகைப் பூவின் மருத்துவகுணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular