தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த 20 வயதுடைய கருப்பசாமி, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
வழக்குப்பதிவுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.




