நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் இன்று (ஜூலை 20) பேரணி நடத்தினர். இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சௌக், ஜன்பத், படேல் சௌக், மத்திய செயலகம் மற்றும் சேவா தீர்த்தம் ஆகிய 5 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை டெல்லி மெட்ரோ நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் தலைநகரில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.




