உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சதுரங்க விளையாட்டில் தமிழ்நாடு உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்று, சதுரங்கத்தின் தலைநகராக முன்னேறி வரும் நிலையில், இளைஞர்கள் இந்த விளையாட்டின் நுட்பங்களையும் திறன்களையும் கற்றுக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் சாதித்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சதுரங்க வளர்ச்சிக்கும், இளம் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இதுபோன்ற முயற்சிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி துணைநிற்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Read Previous

கரப்பான் பூச்சி ஜனதா பேரணி: டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!

Read Next

கரூரில் பாலியல் தொல்லை வழக்கு: கைது செய்யப்பட்ட நபரைத் தாக்கிய வீடியோ வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular