இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் 7.5 கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.




