ஜூலை 31-க்குள் e-KYC கட்டாயம்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

 

தமிழ்நாட்டில் இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்களை தொடர்ந்து பெற, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

 

அரசின் புதிய அறிவிப்பின்படி, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஜூலை 31-க்குள் அருகிலுள்ள நியாய விலைக் கடையில் e-KYC விரல்ரேகை பதிவை கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

 

போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்கவும், தகுதியற்ற பயனாளர்களை பட்டியலில் இருந்து அகற்றவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும், ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக நீக்குவதற்கும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

எனவே, ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் தொடர்ந்து கிடைக்க, தாமதிக்காமல் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று e-KYC விரல்ரேகை பதிவு உள்ளிட்ட தேவையான பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read Previous

தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: காவல்துறை விளக்கம்; லாக்-அப் மரணம் அல்ல என தகவல்..!!

Read Next

நாவல் பழம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular