தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன் மற்றும் செயல் இயக்குநர் (திட்டங்கள் மற்றும் கொள்முதல்) பி. செல்வராஜ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது, தமிழக அரசின் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு ஆதரவாக ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர். இந்த நிகழ்வு, அரசு–தனியார் இணைந்து மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது திட்டத்தின் நோக்கம் மற்றும் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்னேற்ற முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




