‘நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு மேலும் ₹1 கோடி நிதியுதவி.. முதலமைச்சர் விஜயை சந்தித்த பனிமலர் கல்லூரி நிர்வாகிகள்..!!

 

 

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், பனிமலர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் பி. சின்னதுரை, இயக்குநர்கள் டாக்டர் சி. சக்திகுமார் மற்றும் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

 

அப்போது, தமிழக அரசின் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு ஆதரவாக ரூ.1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை முதலமைச்சரிடம் வழங்கினர். இந்த நிதியுதவி, மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. அரசு–தனியார் இணைந்து மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த பங்களிப்பு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

பப்பாளி விதையை தூக்கி எறியாதீர்கள்.. இதில் இருக்கும் ஆச்சரியமான நன்மைகள்..!!

Read Next

இயற்கை வேளாண்மை வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜயுடன் ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular