ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய வெள்ளியங்கிரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




