பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!

 

தெலங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவன் அபிஷேக்கை, சக மாணவர்கள் 12 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பின்னர் நடந்த சம்பவத்தின் உண்மை நிலவரத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவன் தாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

த்ரிஷாவை சுற்றி எழும் சர்ச்சை..!! காட்டமாக பதிலடி கொடுத்த நடிகை..!

Read Next

அதிமுகவுக்கு குட்பை..!! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular