பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!

 

 

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார்.

 

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 30,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பெண்களுக்கும், இந்தத் திட்டத்தின் மூலம் அதிகளவில் பயனடையக்கூடியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், திட்டத்தின் பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது, யார் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட விவரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியான பின்னர், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.

Read Previous

இனிப்பு இல்லாத உணவும் சர்க்கரையை உயர்த்துமா? இந்த உணவுகளில் கவனம் தேவை!

Read Next

புதன் பெயர்ச்சியால் செப்டம்பரில் பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்! தொழிலிலும் வெற்றி குவியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular