துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

 

 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஐ அம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் வெளியீடு செப்டம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Read Previous

எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டம்: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் விலகல்!

Read Next

பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இந்த 4 செட்டிங்ஸை மாற்றுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular