இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் கடிதம் எழுதுவதுடன் ஏன் நிறுத்திக் கொள்கிறார்கள் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அரசு இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கக் கூடாது என்றும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைந்து மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




