சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு கார்த்தி பாராட்டு!

 

 

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று (ஆக.14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கி அட்லுரியின் எழுத்து மற்றும் திரைக்கதையை வெகுவாக பாராட்டியுள்ளார். சூர்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் நடிப்பும் வியக்க வைக்கும் வகையில் இருப்பதாக தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், படம் முழுவதும் புன்னகைக்க வைப்பதுடன், மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

 

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள கார்த்தியின் பதிவு, சூர்யா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

மீண்டும் வெடித்த மவுண்ட் எட்னா! சிசிலியில் விமான சேவை பாதிப்பு!

Read Next

வீட்டில் இந்த மின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க! ஆபத்து ஏற்படலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular