தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்களின் தகுதிகாண் பருவம் நிறைவடைவதற்குள் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.




